கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரியில் அன்னை மருத்துவமனை தொடங்கப்பட்டது இவ்விழாவில் அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர் மருத்துவ மனையின் உள்நோயாளிகள் பிரிவையும், இந்திய ராணுவ  லெப்டினன்ட் ஜெனரல் எல் கே ராஜு மருத்துவ மனையின் வெளி நோயாளிகள் பிரிவையும் திறந்து வைத்து சிறப்பித்தனர். 

இந்த மருத்துவமனை 24 மணி நேர இயங்கும் சிறப்பு மருத்துவ மனை என்றும். பல தொற்றும்,தொற்றா நோய்களை கண்டறியும் உயர்ரக ஆய்வகம் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இம்மருத்துவமனை அருகில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இவ்விழாவில்  அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் Dr. அன்வர் கபீர், தலைமை செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், தலைமை நிர்வாக அதிகாரி ரவி இயக்குனர் முனைவர் ப. மணி, அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் சுமதி, மக்கள் தொடர்பு அதிகாரி பாலாஜி ,மருத்துவர் ரமாதேவி மற்றும் மருத்துவ அலுவலக அதிகாரிகள்  அருண், கார்த்திக்கேயன், ராஜ்குமார் ஆகியேர்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்..மருத்துவ மனையில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவசிறப்பு முகாம் நடைபெற்று பலரும் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது..
1
0
0
0
0
0