திமுக கூட்டணி என்பதே இல்லை. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதுதான் இருந்தது. அதுவும் தற்போது இல்லை" என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. இருந்தாலும், தேவையான 118 பெரும்பான்மையோடு வந்தால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறேன் என தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக. அதன் அடிப்படையில், உடனடியாக திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து பின்னர், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றன.
இது தொடர்பாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சண்முகம் கூறியதாவது; “கடந்த 8ஆம் தேதி சிபிஎம் மாநிலக் குழு கூடி தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என முடிவெடுத்தோம். யாருடைய தூண்டுதலின் பேரிலும் அந்த முடிவை சிபிஎம் எடுக்கவில்லை.
-
உண்மை.????
