செங்கல்பட்டு: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி சாலையோர கால்வாயில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வந்த கார், திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை கால்வாயில் இருந்து மீட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0
0
0
0
0
0