நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அவரது திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையிலும் தட்கோ தலைவர் மதிவாணன் முன்னிலையிலும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை சார்பில் திருக்குவளை கலைஞர் இல்லத்தை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தொடங்கி வைத்தார். முன்னதாக முரசொலி மாறன், முத்து வேலர், அஞ்சுகம் அம்மையார் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.கே.வேதரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன், ஓன்றிய செயலாளர்கள் மலர் வண்ணன், தாமஸ் ஆல்வா எடிசன், மகா.குமார், உதயம் முருகையன், சிக்கல் ஆனந்த் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்

1
0
0
0
0
0