நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. நாகை நாயுடுகள் சமுதாய நல சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் சத்தியா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சுகாதார செவிலியர்கள் செய்யும் வேலையை படம் பிடித்து பகிர சொல்வதை தவிர்க்க வேண்டும், வாராந்திர ஆய்வு கூட்டம் மாலை 5 மணிக்கு மேல் நடத்தக்கூடாது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளை சேர்க்க சுகாதார செவிலியர்களை அட்டெண்டர்களாக செல்ல வேண்டும் என்ற போக்கை கைவிட வேண்டும். அரசு விடுமுறை நாட்களிலும் அரசு நலத்திட்ட முகாம் நடத்துவது விடுமுறையில் சுகாதார செவிலியர்களை வேலை செய்ய சொல்வதை தவிர்க்க வேண்டும், வாரந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்திற்கு சுகாதார செவிலியர்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் இந்திரா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;

இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மகப்பேறு மரணம் சிசு மரணத்தை பற்றி அரசாங்கம் கவலை கொள்ளவில்லை. கிராம சுகாதார செவிலியர்கள் மக்களை சந்திக்காமல் ஆன்லைனில் மட்டுமே பணி செய்ய மிரட்டப்படுகின்றனர். மாநில அரசுக்கு (PICME) ஒரு ஆப் மத்திய அரசுக்கு (U WIN)  ஒரு ஆப் என கிராம செவிலியர்கள் பணி முடித்த பிறகும் இரவிலும் ஆன்லைன் மீட்டிங்கில் பங்கு கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆகவே இவை அனைத்தும் தவிர்க்க வேண்டும் யூ வின் ஆப்பினை பயிற்சி அளிக்கும் அதிகாரிக்கு இரண்டு நாள் பயிற்சி பயன்படுத்தும் கிராம செவிலியர்களுக்கு 2 மணி நேரம் பயிற்சி கிராம செவிலியர்களுக்கு ஒரே ஆப்  பயன்படுத்த உத்தரவு  வேண்டும் இது தொடர்பாக இயக்குனர் பொது சுகாதாரம் சந்தித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டத்தில் மாநில இணை செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் வேத லட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் ராணி, புனிதா, கீதா, மாவட்ட இணை செயலாளர் துர்க்கை வள்ளி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாருதி மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
1
0
0
0
0
0