தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஏஆர்ஆர் சாலை அருகில் இரும்பு, பஞ்சு உள்ளிட்ட சேமிப்பு கிடங்கில் திடிரென தீ பற்றியது. பயன்பாடு இல்லாமல் இருந்ததாலும் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் தீ பரவிக்கொண்டிருந்தது, இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தங்களால் முடிந்த அளவு அருகில் உள்ள வீடுகளில் தீப்பிடிக்காமல் இருக்க வாழிகளில் தண்ணீர் பிடித்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் வெயில் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது.இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீயணைப்பு வாகனத்திற்காக காத்திருக்காமல் 
பக்கத்து வீட்டிலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் அடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் தீ விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் இடத்தின் உரிமையாளரிடம் கேட்டறிந்தார்.
0
0
0
0
0
0