சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மனைவி மல்லிகா. கடந்த 2014 - ல் காணாமல் போனதாக அவரின் மகன் கொடுத்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து காவல்துறையினர் தேடிவந்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இன்னிலையில் காணாமல் போன மல்லிகா மும்பை மாநிலம் புணேவில் உள்ள ஆசிரமத்தில் இருப்பதாக நாகை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு நாகை காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து புணேவிற்கு சென்ற காவல்துறையினர் மூதாட்டி மல்லிகாவை மீட்டு நாகை அழைத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடம்  ஒப்படைத்தனர்.

9 ஆண்டுகளுக்கு பின்பு மூதாட்டி மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் நடவடிக்கையை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பாராட்டினார். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி பெரும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0
0
0
0
0