மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த இராஜகோபாலபுரம் சரஸ்வதி வித்யாலயம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் விமல் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன், பாமக மாவட்ட தொகுதி செயலாளர் சந்தானம், குத்தாலம் பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு பேனா புத்தகம் வழங்கினர்.
இந்நிகழ்வில் பாமக இளைஞரணியினர், உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.