மயிலாடுதுறை: மணல்மேடு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இடுபொருள்களை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், ஒன்றிய குழு தலைவர்கள். ஒன்றிய செயலாளர்கள், மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
1
0
0