கும்பகோணம்: புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவதை வழியுறுத்தி தாராசுரம் அண்ணா, நேரு காய்கறி மார்க்கெட் வாயிலில்  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை குடந்தை மாநகர மேயர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்குமரன், மாநகர நல அலுவலர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், தேவையற்ற குப்பைகளை ரோட்டில் போட்டு எரிப்பது கூடாது, மாசு சீர்கேட்டினை உருவாக்கக்கூடாது, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.    

மேலும் இளம் சிறகுகள் அறக்கட்டளை, ஆதீரா அறக்கட்டளை, செல்வராஜ் நினைவு அறக்கட்டளை, மற்றும் விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
1
1
0
0
0
0