மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 20.12.2022 அன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புதிய மகளிர் உறுப்பினர் சேர்க்கை விக்கிரம குத்தாலத்தில் நடந்தது. இந்நிகழ்விற்கு பேரூர் பதினைந்தாவது வார்டு உறுப்பினர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.

நகர துணை செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான குத்தாலம் க.அன்பழகன் கலந்து கொண்டு புதிய மகளிர் உறுப்பினர் சேர்க்கை பணியினை துவக்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன், பேரூர் கழகச் செயலாளர் எம் சம்சுதீன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூர் துணைச்செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர் மற்றும் பேரூர் கழகத்தை சேர்ந்த அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1
0
0
0
0
0