தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, கழனிவாசல் ஊராட்சி, சின்ன கழனிவாசல் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அமுதா, பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், பதினொன்று  ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். 

இந்த 15 ஏக்கர் நிலத்தை தனிநபராக ஒருவருக்கே ஏலம் விடக்கூடாது. கிராமத்தைச் சேர்ந்த 15 ஏழை பொதுமக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் பிரித்து ஏலத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பன்னீர்செல்வம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், மாரியப்பன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அலுவலக வாயிலில் இந்து முன்னணி அமைப்பினர் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

0
0
0
0
0
0