கள்ளக்குறிச்சி: திமுக ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஏழை மக்களுக்கு மேலும் பல திட்டங்களை செய்யும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்காக 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இலவச குடியிருப்பு வீடுகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில்: ஏழை எளிய மக்களுக்கான உண்மையான கட்சி அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான். விளிம்பு நிலையில் இருக்கம் நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகளின் படிப்புகாக பாடுபட்டுவருவதும் அதிமுக மட்டும் தான். திமுக ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஏழை மக்களுக்கு மக்களுக்கு மேலும் பல திட்டங்களை அதிமுக செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
0
0
0
0
0
0