தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை, பத்திரிகை ஆசிரியர்களின் ஒற்றுமையின் அவசியம், அரசு அடையாள அட்டையின் புதிய விதிகள், பத்திரிகையாளர் நலவாரியம் உள்ளிட்ட பத்திரிகைத்துறை சார்ந்த பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்கள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பத்திரிகை ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள்  கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தமிழக முதல்வர்,  செய்தித்துறை அமைச்சர், செய்தித்துறை இயக்குநர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் சரவணன் பேசுகையில்: ஆக்கபூர்வமான இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், ஆலோசனை கூட்டத்தின் கோரிக்கைகள் விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0
2
0
0
0
0