விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அவரவர் இல்லங்களில் வைத்து வழிபட அனுமதி என்றும் தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அமைப்புகளுக்கு பொருந்தாது என்றும் கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க மத வழிபாட்டுக்கு தடை என்றும் அறிவித்துள்ளது. ஆனால் மற்ற மத வழிபாடுகள் நடைபெற அரசு தடை விதிக்கவில்லை. மதச்சார்பற்ற நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டமா? வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு இந்து சமய வழிபாட்டுக்கு மட்டும் தடை விதித்திருக்கிறது. இது ஏற்புடையதல்ல, 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வருக்கு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி கடிதம் அனுப்பி இருந்தோம். பொது இடத்தில் கட்டுப்பாடுகளுடன் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும், என்ற கோரிக்கையை இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆங்காங்கே வைக்கும் விநாயகர் சிலைகளை அந்தந்த நீர்நிலைகளில் கரைத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. எங்கள் வீட்டில் வைத்து விநாயகர் வழிபாடு நடத்த அரசிடம் ஏன்? அனுமதி பெற வேண்டும், என்ற கேள்வியை பலமாக நாங்கள் முன்னெழுப்புகிறோம். பள்ளி கல்லூரிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு, கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் திறப்பு, மதுபான கடைகள் திறப்பு, இன்றைய தினம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டிருக்கிறது கொடைக்கானல் வனப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இங்கெல்லாம் கூட்டம் கூடும்போது பரவாத கொரோனா விநாயகர் வழிபாட்டில் மட்டும் பரவுமா? என்ற கேள்வியை அரசுக்கு முன்வைக்கின்றோம். விநாயகர் வழிபாடு நடத்தினால் கொரோனா தொற்று பரவும் என்ற அரசின் அறிவிப்பு வேடிக்கையானது.

இந்து சமய வழிபாட்டு முறையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அரசின் கட்டுப்பாட்டுக்கு உடன்படுகிறோம். ஆனால் சில நிபந்தனைகளுடன் சில மாற்றங்களை அரசு அறிவிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் வழிபாடு நடத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஒட்டுமொத்தமாக தடைபோட்டு விநாயகர் வழிபாட்டை தடுக்க நினைத்தால் அரசின் தடையை மீறி விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். கும்பகோணம் பகுதியில் மேலக்காவேரி, சோலையப்பன் தெரு, வன்னாங்கன்னி, சாரங்கபாணி மடவிளாகம், டபீர் தெரு, பாலக்கரை, காமராஜர் நகர், ஆதனூர். நீலத்த நல்லூர், ஆலமன்குறிச்சி, தத்துவாஞ்சேரி, பரவனூர் ஆகிய இடங்களில் வருகின்ற 9ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். 

இவ்வாறு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா, சிவசேனா மண்டல அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
2
0
0
0
0
0