தமிழ் வரலாறுகளில் கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வைத்தே நம்முடைய பக்திக்கு மிஞ்சிய விஷயம் ஒன்றுமே இல்லை என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும். கோவிலுக்குள் சென்று வந்தாலே நம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். இதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? சில சமயங்களில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்! இப்படி உங்களுக்கு நேர்ந்து இருந்தால் அதற்கு இதுதான் காரணம்!

உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அதிர்வலைகளை உள்வாங்கும் திறன் கொண்டவை. எது நமக்கு கிடைக்கிறதோ! அதை பொறுத்து தான் நம்மால் இயங்கவும் முடிகிறது. உதாரணத்திற்கு உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் நீங்கள் மகிழ்வாக உணர்வீர்கள்! அப்படி இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த நிமிடம் உங்களுடைய மனம் நெகடிவ் ஆற்றலுக்கு தள்ளப்படும். இதைத்தான் பிரபஞ்சம் மூலம் நமக்கு அனுதினமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் நெகட்டிவ் மற்றும் பாஸிட்டிவ் அதிர்வலைகள் உண்டு. இதில் எது நம்மிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் நம்முடைய வாழ்வும் அமைகிறது. கோவிலுக்குள் சென்ற உடன் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைக்கும். அதனால் தான் கோவில் படியைத் தாண்டியவுடன் ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல நம் மனம் உணர்கிறது. கோவிலின் மூல கர்ப்பகிரகத்திற்கு கீழே செப்புத் தகடுகள் மந்திரங்களால் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. செப்பு தகடுகள் மூலம் வரும் காந்த அலைகள் நம்மிடம் முழுமையாக வந்து சேர தான் கர்ப்பகிரகம் ஆனது ஜன்னல்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது உள்ளிருந்து வரும் காந்த அலைகள் நமக்கு முழுமையாக கிடைக்கப் பெறும். இதனால் மனதில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் நீங்கி பாசிட்டிவ் எனர்ஜி உள்வாங்கும். இந்த எனர்ஜியை உள்வாங்குவதற்கு தான் பிரசித்தி பெற்ற பழம்பெரும் கோவில்களில் ஆண்களை மேல் சட்டை இல்லாமல் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பழங்காலத்தில் ஆண்கள் சட்டை இல்லாமல் தான் கோவிலுக்கு செல்வது உண்டு என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

கோவிலுக்குள் ஒலிக்கப்படும் மணியின் ஓசையும், மந்திர ஜப ஒலிகளும் ஒலி ஆற்றலை வெளியிடுகின்றன. இந்த ஒலி எனர்ஜிகளை நாம் உள்வாங்கும் பொழுது நம் மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவாக சிந்திக்கக்கூடிய அறிவாற்றல் பிறக்கும். எது சரி? எது தவறு? என்கிற முடிவுக்கு வரக்கூடிய மனநிலை வரும். நம்முடைய வேண்டுதல்கள் பலிக்கும் என்கிற நம்பிக்கையும் பிறக்கும். கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் முதல் தீர்த்தம் வரை அத்தனையும் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. தீர்த்தத்தில் சேர்க்கப்படும் பச்சைகற்பூரத்தில் பென்சாயின் எனும் வேதிப்பொருள் காயத்தை செப்டிக் ஆக விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் ஏலக்காய், துளசி, கிராம்பு ஆகிய பொருட்களை கலந்து கொடுக்கும் தீர்த்தங்களில் நோய்களை நீக்கும் சக்தியும் உண்டு. மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகிய அனைத்தும் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொழுது பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். மேலும் பிரதட்சணம் செய்யும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் எரிந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவும். அடிக்கடி கோவிலுக்கு சென்று வருபவர்களுக்கு நாட்பட்ட வியாதிகள் எதுவும் வருவதில்லை. இதற்கு நம் முன்னோர்களே சான்று...
0
0
0
0
0
0