கொரோனோ நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில். வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் சில தினங்களுக்கு முன் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு 
உத்தரவிட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி மதுக்கடைகளை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தது.  

இந்நிலையில் இந்து முன்னனி சார்பில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்த தமிழக அரசு, கோவிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் தமிழகத்தில் கோயில்கள் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான எந்த ஒரு அனுமதியையும் தற்போது வரை தமிழக அரசு வழங்கவில்லை.

இதனால் இன்று தமிழகம் முழுவதும் கோவிலைத் திற... என்ற முழக்கத்துடன் இந்து முன்னணி பேரியக்கத்தினர், ஆலயங்களை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பட்டம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் பெருநகர தலைவர் மாதவன் வழிகாட்டுதலின்படி  
ஆதிகும்பேஸ்வரர் கோவில் வாயிலில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய தலைவர் பிரபு, நகர இணைச் செயலாளர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
18
0
1
0
0
0