கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கணினி பொறியியல் அறிவியல் துறை நான்காம் ஆண்டு மாணவிகள் செல்வி K.சொர்ணமால்யா, K.ஆர்த்திகா மற்றும் S.ஆர்த்தி ஆகியோர் இணைந்து உதவி பேராசிரியை B.திவ்யா அவர்களின் வழிகாட்டுதலின்படி டிஜிட்டல் முறையில் திருட்டை கண்டறியும் நவீன கருவியை வடிவமைத்துள்ளனர். 

சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்கும் வகையிலும், திருடப்பட்ட பொருட்களை எளிமையாக மிகக்குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க ஏதுவாக இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை வங்கி லாக்கர், வீட்டுலுள்ள பீரோ, பெட்டி மற்றும் ஏடிஎம் இயந்திரம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். பொருட்கள் திருடப்பட்டால் இந்த கருவி திருடனின் புகைப்படம் மற்றும் அவன் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து கூறி விடும். 

மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பிரத்தியேகமான கருவியை திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் V. அசோகன் பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். 

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர். T.பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். M.ருக்மாங்கதன், திட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஆனந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், சாதனை புரிந்த மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

4
0
2
0
0
0