கும்பகோணத்தில் விஜய் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு ஆவின் பால் கொடுத்து உற்சாகமாக நடிகர் விஜயின் பிறந்தநாளை கொண்டாடினர்.

கும்பகோணம் பெருநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் முத்து துணை தலைவர் அரவிந்த் பொருளாளர் ராஜ்குமார் நகர ஆலோசகர் சரவணன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தாஸ் மற்றும் சுதன் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வசந்த் துணைத்தலைவர் ஹரி பிரகாஷ் உள்ளிட்டோர் வீட்டுக்கு வீடு சென்று ஆவின் பால் வழங்கினர். தொடர்ந்து அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
5
0
2
1
0
0