வங்​கதேசத்​தில் ஹிந்​துக்​கள் உட்பட சிறு​பான்​மை​யினருக்கு எதி​ராக தொடரும் தாக்​குதல் சம்​பவங்​களுக்​கு, மத்​திய அரசு கண்டனம் தெரி​வித்​துள்ளது. இதை அரசி​யல் வன்​முறை அல்​லது ஊடகங்​களின் மிகைப்​படுத்​தல் என்று கூறி, புறக்​கணிக்க முடி​யாது எனவும் குறிப்​பிட்​டுள்​ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்​தில், சமீப நாட்களாக ஹிந்​துக்கள், கிறிஸ்​துவர்​கள் உள்​ளிட்ட சிறு​பான்​மை​யினருக்கு எதி​ராக வன்​முறை சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.
சமீபத்​தில் ஹிந்து மதத்​தைச் சேர்ந்த தீபு சந்​திர தாஸ் என்ற இளைஞரை, அங்​குள்ள கும்​பல் மரத்​தில் தலைக்​கீழாக தொங்​க​விட்​டு, உயிருடன் எரித்து கொன்ற சம்​பவம் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்​தித்​தொடர்​பாளர் ரன்​தீர் ஜெய்​ஸ்​வால், டில்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத நிந்​தனை செய்​த​தாக கூறி ஹிந்து இளைஞரை, ஒரு கும்​பல் உயிருடன் தீயிட்டு கொன்​றதை ஏற்க முடி​யாது. இச்​சம்பவத்​திற்கு இந்​தியா கண்டனம் தெரி​விப்​பதுடன், இக்​குற்​றச்​செயலில் ஈடு​பட்​டவர்கள் நீதி​யின் முன் நிறுத்​தப்
பட வேண்​டும். வங்கதேசத்​தில் சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான வன்​முறை சம்​பவங்​கள் பெரும் கவலைக்​குரிய விஷயம். அங்​குள்ள இடைக்​கால அரசின் பதவிக்​காலத்​தில் மட்​டும் சிறு​பான்​மை​யினருக்கு எதி​ராக 3,000 வன்​முறை சம்பவங்கள் பதி​வாகி உள்​ளன.

இதை அரசி​யல் வன்​முறை என்​றோ, ஊடகங்​களின் மிகைப்​படுத்​தல் என்றோ கூறி, வங்​கதேச அரசு புறக்​கணிப்​பதை ஏற்க முடி​யாது. வங்​கதேசத்​தில் சுதந்​திர​மான மற்​றும் நியாய​மான தேர்​தல் நடப்​பதை மத்​திய அரசு ஆதரிக்​கிறது. இந்த கண்​ணோட்​டத்​துடனே, தாரிக் ரஹ்​மான் திரும்​பியதை​யும் பார்க்​கி​றோம். அங்​குள்ள சிறு​பான்​மை​யினரின் உரிமை​களை பாது​காக்​
கும்​படி, மத்​திய அரசு தன் நீண்​ட​கால நிலைப்​பாட்டை மீண்​டும் வலி​யுறுத்​துகிறது.

வங்​கதேசத்​தில் தற்​போதைய நிலை​மையை உன்​னிப்​பாக கவனித்து வரு​கி​றோம். மதத்தை பாரா​மல், அனைத்து மக்​களை​யும் பாது​காக்க தன் அரசி​யலமைப்பு கடமை​களை வங்​கதேச அரசு நிலைநிறுத்​தும் என எதிர்​பார்க்​கி​றோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.
0
0
0
0
0
0