கொரானா வைரஸ் தாக்கத்தால் இலட்சக்கணக்கான உயிர்கள் இறந்தும், மக்கள் நோய் தொற்றில் சிக்கி தவிக்கும் இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்தும், நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் 17ம் தேதி போராட்டம் நடத்தபடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் அறிவித்தனர். 

அதன்படி ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் மற்றும் பாமகவினர் அவர் இல்லத்தின் முன்பு பதாதைகள் மற்றும் கருப்புகொடிகளை கையில் ஏந்தி, மதுபாட்டில்களை மாலையாக அணிந்துகொண்டு மதுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர், பின்னர் மதுபாட்டில்களை தரையில் உடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதில் பாமக பொறுப்பாளர்கள் எஸ்.பி.குமார், சுதாகர், ரவி, தமிழ்வேந்தன், வினோத், டெல்டா கார்த்தி, ரஞ்சித், ராஜ்குமார், ராஜேஷ், மணிகன்டன்,அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0
0
0
0
0
0