காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர்  திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கும், நேற்று இரவு கல்லணைக்கும் வந்தடைந்தது.

இந்நிலையில் பாசனத்திற்காக இன்று காலை கல்லணையை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.

கல்லணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை, கால்வாய், கொள்ளிடம் வழியாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயத்திற்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

2
0
0
0
0
0