தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து அலுவலர்களிடமும், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்துவாரி தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்பிக்கள் தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி ராஜா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ், திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் S.கல்யாண சுந்தரம், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாராசுரம் அசோக்குமார், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
2
0
2
0
1
1