திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில். பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து சேத்துப்பட்டு, ஆரணி, சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு, நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் தசரதன், அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜாபர் அலி அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோவிந்தராஜ், கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு காரணமான, மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழுந்து வீட்டிலேயே முடங்கி உள்ள சூழ்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை வைத்தும் ஆட்டோவை மாடு இழுப்பது போன்றும் 
நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் தேவிகாபுரம், போளூர், ஆரணி, திருவண்ணாமலை, உள்ளிட்ட இடங்களிலும், பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

4
0
0
0
0
0