டெல்லி: இன்று நாடு முழுக்க உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புப் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லம் அருகே உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

உலகெங்கும் இன்று டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் கிறிஸ்துவர்களின் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகக் கிறிஸ்துமஸ் பண்டிகை கருதப்படுகிறது. இதனால் டிசம்பர் கடைசி வாரம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். இந்தாண்டும் கொண்டாட்டங்கள் கோளகமாக இருக்கிறது.

இந்தியாவிலும் நாடு முழுக்க உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகிறார்கள். இதற்காகத் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களும் நடைபெறுகிறது. இதற்கிடையே கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இது குறித்த போட்டோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடி மேலும், "டெல்லியில் உள்ள ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணையை கிறிஸ்துமஸ் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

4
2
0
0
0
0