தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் குழுவை நியமனம் செய்துள்ளார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். 

இந்நிலையில் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் சஞ்சய், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோ.வி.செழியன், மயிலாடுதுறை மாநிலங்களவை உறுப்பினர் ராமலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகன்,  பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, கும்பகோணம், ஒன்றிய செயலாளர் தாராசுரம் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
9
0
0
0
0
0