கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன்  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  திட்டக்குடி தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்  தீவிரமாக எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  ஊராட்சி நிர்வாகத்திடம் அனைத்து ஊராட்சிகளிலும் கிருமி நாசினி பிளீச்சிங் பவுடர் சரியான முறையில் போடப்படுகிறதா என்பது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். 

தொடர்ந்து அவர் பேசும்போது அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அனைத்து ஊராட்சிகளிலும் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனவும், அனைத்து கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது அதனை தீவிரப்படுத்துவதுடன் யாரேனும் காய்ச்சல், சளி, இருமல் அல்லது கொரோனா தொற்று இருந்தால் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் முற்றிலும் கொரோனா தொற்று ஒழிக்கப்படும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது சுகாதாரப் பணி துணை இயக்குனர் செந்தில்குமார், திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி, வேப்பூர் தாசில்தார் செல்வமணி, திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சுமதி, திட்டக்குடி அரசு தலைமை மருத்துவர் செல்வேந்திரன், வட்டார மருத்துவர்கள் விவேக், தமிழ்ச்செல்வன். திமுக சார்பில் மங்களூர் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கண் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதிகள்  செந்தில்குமார், சுரேஷ், வழக்கறிஞர் பாண்டியன், ஆசிரியர் கொளஞ்சிநாதன்,  இளங்கோவன், பாபு சரவணன் மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
0
0
0
0
0
0