கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் முருங்கைக்காய் சாம்பார், மிளகு ரசம், வத்தல் குழம்பு, முருங்கைகீரை கூட்டு, கத்திரிக்காய் பொறியல் மற்றும் முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு, மங்களூர் ஒன்றிய செயலாளர் ரெங்க சுரேந்தர் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை திட்டக்குடி தொழிலதிபர் பி.டி.ராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக சார்பில் மங்களூர் ஒன்றிய செயலாளர் பட்டுர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர்கள் இளங்கோவன், பாபு, சரவணன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாநில நிர்வாகி ஜெயபால், மாவட்ட நிர்வாகி சுரேஷ், நகர செயலாளர் மருத சீனிவாசன், நகர தலைவர் முருகன், நகர அமைப்பாளர் தெய்வ பிரபு, நகர அமைப்பு செயலாளர் சதீஷ், நகர நிர்வாகி கீர்த்திராமன், ரவி, அரவிந்த், ஒன்றிய நிர்வாகி பரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
1
0
0
0
0
0