கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு உத்தரவின் படி பொதுமக்களுக்கு அவர்களின் வீட்டின் அருகிலேயே சென்று காய், கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு விதமாக சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும், 
36 காய், கனி, வியாபாரிகள் சேத்துப்பட்டு பேரூராட்சியில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றிருந்தனர்.

அவர்களின் நடமாடும் காய், கனி வாகனங்களை சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் பேசுகையில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய காய், கனி பொருட்களை நடமாடும் காய்,கனி வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து சமூக விலகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
0
0
0
0
0
0