கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பத்து மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் சுற்றியவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததுடன் வழக்கும் பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுத்திட கடந்த 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி சிலர் இரண்டு மற்றும் நான்கு வலம் வருகின்றனர். தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய நிலையில் நேற்று திட்டக்குடியில் அத்தியவசிய தேவைக்காக காய்கறி, மளிகை,  மீன் மற்றும் இறைச்சி கடைகள் தினசரி பகல் 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டக்குடியில் பகல் 10 மணிக்கு பிறகு கடைவீதி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் பல கடைகள் திறந்திருந்தன போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்களின் எச்சரிக்கைக்கு பின் கடைகள் மூடப்பட்டன, அதே போல் நேற்று திட்டக்குடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையில்லாமல் 
சாலைகளில் சுற்றி வந்தவர்களுக்கும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், இ-பதிவு இல்லாமல் காரில் வந்தவர்களுக்கும், போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது காவல் துறையினர் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்றும்,  கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் தமிழக அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் போலீசார் அறிவுறுத்தி திரும்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின் படி, காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில், திட்டக்குடி காவல்துறையினர், வாகன தணிக்கையிலும், கொரோனா பாதுகாப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
0
0
0
0
0
0