மும்பை: உதய்பூரில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பிட்ட சில விஐபி பிரபலங்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அம்பானி குடும்பத்தினர் சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டது எனக் கூறுகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக தங்களது காதலை ரகசியமாக பாதுகாக்க நினைத்தனர். ஆனால், அவர்கள் கொடுத்த சிக்னலை வைத்து ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் இருவரும் காதலிப்பதை பலமுறை உறுதி செய்தனர். பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் வெற்றிகரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது கணவன் மனைவியாக மாறியுள்ளனர். ராஷ்மிகா தனது கழுத்தில் தாலி ஏறும் போது கண்கலங்கும் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த போது அவரது திருமணம் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் என்று நினைத்து பார்த்திருப்பாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திருமணம் செய்யவிருந்தார் ராஷ்மிகா. இவர் அறிமுகமான கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ஷெட்டி உடன் ஏற்பட்ட காதல், திருமணத்தை நோக்கி நகர்ந்தது. இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இதனால் இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்னை என்று பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். பலரும் கூறியது போல் இந்த திருமணம் நடைபெறாமல் நின்று போனது.

" யாரையும் திட்டாதீர்கள், அவரவர்களுக்கு என்று ஒரு தேர்வும் முடிவெடுக்கும் உரிமையும் உள்ளது" 

இவர்களின் திருமணம் நிற்க முக்கிய காரணம் ராஷ்மிகாவிற்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததுதான் என்றும் அதனால் அவர் ரக்‌ஷித் ஷெட்டியை வேண்டாம் என்று உதறிவிட்டார் என்றும் எல்லாம் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் சம்மந்தப்பட்ட ரக்‌ஷித் ஷெட்டியோ மிகவும் ஜெண்டில் மேனாக ஒரு பதிவை தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்தார். குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பகிர்ந்தார். அதில், " யாரையும் திட்டாதீர்கள், அவரவர்களுக்கு என்று ஒரு தேர்வும் முடிவெடுக்கும் உரிமையும் உள்ளது" என்று பதிவிட்டார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் பல இணையவாசிகள் காதலில் பிரிவைச் சந்தித்த பின்னரும் காதலி நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் ஆண்களில் ரக்‌ஷித் ஷெட்டியும் ஒருவர் என்று பலரும் அவரை பாராட்டினர்.

ரக்‌ஷித் ஷெட்டி:

இன்னுமும் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் உள்ளார். 777 சார்லி என்ற படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் பலரும் இவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வெகு சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு சிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு மிகவும் அழகாக கேப்ஷனும் இட்டுள்ளார்.

அதாவது, "எனது அன்பிற்குரியவர்களே, இதோ எனது உலகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். எனது கணவர் மிஸ்டர் விஜய் தேவரகொண்டா. உண்மையான காதல் என்றால் என்ன என்று எனக்குப் புரிய வைத்தவர் விஜய் தேவரகொண்டா தான். மன அமைதி என்பது எப்படி இருக்கும் என்று எனக்கு உணரவைத்தவர் எனது கணவர் விஜய் தேவரகொண்டா தான்

பெரிய கனவுகளைக் காண்பது தவறில்லை என்று ஒவ்வொரு நாளும் எனக்குத் தைரியம் அளித்தவர். என் கற்பனைக்கும் எட்டாத உயரங்களை என்னால் அடைய முடியும் என்று என்னைத் தொடர்ந்து நம்ப வைத்தவர் எனது காதல் கணவர் விஜய் தேவரகொண்டா. யார் பார்க்கிறார்கள் என்ற கவலைப்படாமல், நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் ஆடுவதற்குக் கற்றுக்கொடுத்தவர். நண்பர்களுடன் பயணம் செய்வதே வாழ்க்கையின் ஆகச்சிறந்த விஷயம் என்பதை உணர வைத்தவரும் அவர்தான். இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். காரணமே நீதான்: நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அப்படி மாறியிருக்கிறேன். அதற்கு முழு முதல் காரணம் விஜய் தேவரகொண்டா தான். 

நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். விஜ்ஜூ... உன் மேல எனக்கிருக்கும் காதலை விவரிக்க எனக்கு எப்போதுமே வார்த்தைகள் போதாது. அதை நான் உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், இன்று திடீரென எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை என எல்லாமே ஒரு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு காரணம், இவை அனைத்திற்கும் சாட்சியாகவும், எனது வாழ்வின் மிகப்பெரிய அங்கமாகவும் நீ இருப்பதுதான். 

உன்னுடைய மனைவியாக போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ஏகப்பட்ட சந்தோஷமாக இருக்கிறது. இனி நம் வாழ்க்கையில் கொண்டாட்டம்தான். வா... இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த வாழ்க்கையை நாம் இணைந்து வாழ்வோம். ஐ லவ் யூ" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும் ராஷ்மிகா மந்தனா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவை விட்டுக் கொடுக்காமல் புகழ்கிறாரே என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலரோ ராஷ்மிகா என்னங்க வைரமுத்து மாதிரி பாட்டே எழுதிட்டாங்க என்றும் கேட்டு வருகிறார்கள்.
6
0
0
0
0
0