தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கருப்புகோயில் அருகே புதிய பேருந்துநிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காந்தி பூங்கா அருகே அதிமுக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ் கலந்து கொண்டு பேசுகையில், கும்பகோணம் மைய பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை மாற்றி சாக்கோட்டை அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க விடமாட்டோம். அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது என்றாா்.
மேலும் அதிமுக நிர்வாகிகள் பேசுகையில்:
கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற பல ஏக்கர் நஞ்சை நிலங்கள் கும்பகோணம் அருகே புறநகர் பகுதி கிருஷ்ணாபுரம் அருகில் அமைந்துள்ளன. தற்போது கும்பகோணம் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை அங்கே கொண்டு செல்வதன் மூலம், அந்தப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயரும் என்பதும், அங்கு வீட்டு மனைகள் (Layouts) அமைத்து லாபம் ஈட்டுவதே ஆளுங்கட்சி எம்,எல்,ஏ அன்பழகனுக்கு உண்மையான நோக்கம் என்பதும் அதிமுகவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நஞ்சை நிலங்களை அழித்து, மக்கள் நலனை விட தனிநபர் லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பது வஞ்சகச் செயல்!" எனவும் விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் செயலாக இருப்பதாகவும், கும்பகோணம் மாநகராட்சியில் தற்போதைய பேருந்து நிலையத்திலேயே போதுமான இட வசதி உள்ள நிலையில் திமுக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகளின் உறவினர்களுக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பு உயர வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர்களது நிலங்களுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க துடிக்கும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக ஸ்டாலின் மாடல் அரசையும் கண்டிப்பத்தாக ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரின் முழக்கங்கள் செய்தனர்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆா்.கே.பாரதி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பி.எஸ்.சேகா், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமாா், ஒன்றிய செயலா்கள் சோழபுரம் க.அறிவழகன், அழகு த.சின்னையன், பகுதி செயலாளர்கள் பத்ம குமரேசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.
-
hii
