தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நீர்நிலை புறம்போக்கான முதலி குட்டையை (புல எண்:267/1) சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பும் காசி மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

காசி மடத்திற்கு தலைமுறை தலைமுறையாக மாடாய் உழைக்கும் அனைத்து சாதி குத்தகை சாகுபடியாளர்களுக்கும், நிலுவை தொகை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் வசூலிக்கும் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும்.

கோயில், மடம், ஆதீனங்கள் சுமத்தும் குத்தகை நிலுவை தொகையை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும். 

விவசாய குத்தகை சாகுபடிமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும்.

மின்மோட்டார் வசதியற்று சொற்ப நிலங்களில் ஒரு போக சாகுபடி செய்யும் ஏழை குத்தகை விவசாயிகளிடம் இரு போக குத்தகை கேட்பதை நிறுத்த வேண்டும்.

இன்றைய சாகுபடியாளர்கள் பெயரில் RTR குத்தகை உரிமையை மாற்றிக் கொடு.. மின் இணைப்பை அவர்களின் பெயரிலேயே வழங்க வேண்டும்.

கோயில், மடம், ஆதீன நிலங்களில் குடி இருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் அவர்கள் பெயரிலேயே குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.

கோயில், மடம், ஆதீன அறக்கட்டளை நிலங்களை நில உச்சவரம்பு சட்டதின் கீழ் கொண்டு வந்து நிலங்களை பறிமுதல் செய்து நிலத்தில் நேரடியாக உழைப்பவரிடம் நிலத்தினை ஒப்படைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் புரட்சிமணி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் 15நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவில்லை எனில் மக்கள் திரள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

7
0
1
1
0
0