கொரோனா என்று தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டவர் மரனமடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை கண்டித்தும், அவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த கீழக்கரனை பகுதியில் காளிதாஸ் (வயது 36) கடந்த 5 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள போதிய வசதி இல்லை எஎன்றும், தாம்பரத்தில் உள்ள தங்களது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.  

முதல் தவணையாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர், உறவினர்கள் தாங்கள் கூட வருவதாக கூறியுள்ளனர், அதற்கு மருத்துவ நிர்வாகம் யாரும் வரக்கூடாது என கூறிவிட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

மறுநாள் காலை பாதிக்கப்பட்ட காளிதாஸ்க்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அவரை இங்கிருந்து அழைத்து சென்று வேறு மருத்துவமனையில் 
சிகிச்சை அளிக்க கூறியுள்ளனர். உடனே அங்கிருந்த அவரை அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு ஆக்சிசன் தேவைப்படுவதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுள்ளது. ஆனால் பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாகவும், இறந்த அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் இறந்தவரின் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனால் இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
2
0
0
0
0
0