தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டை தாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்த தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட உள்ளது. அதில் முதல் தவணையான ரூ.2,000 வழங்கும் திட்டத்தை, 
சென்னை தலைமை செயலகத்தில், 10ம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்காக 4,153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதல் தவணை நிவாரண தொகை வழங்கும் பணி, ரேஷன் கடைகளில் இன்று காலை 8:00 மணிக்கு துவங்கிய நிலையில், கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் திமுக ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் C.இளங்கோவன், ஒன்றிய குழு உறுப்பினர் தேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு நிவாரணத்தை வழங்கினர். 

இந்நிகழ்வில் சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராமராஜ், வேலாயுதம், பாபு, பிரபாகரன், கலைவாணி காசிநாதன், ஜெயந்தி சீனிவாசன், வேம்பரசி பன்னீர்செல்வம், சுதா தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சமூக இடைவெளியை பின் பற்றி பொதுமக்கள் நிவாரண பணத்தை பெற்று சென்றனர்.

8
1
2
0
1
0