கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில்
நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வந்த சில்லரை வியாபாரம், ஊரடங்கு காரணமாக தஞ்சாவூர் மெயின் சாலையில் உள்ள சிவகுருநாதன் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

இன்று முதல் 10 மணிக்கு மேல் கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்ற புதிய ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வந்ததுள்ள நிலையில் தற்காலிகமாக சிவகுருநாதன் பள்ளியில் இயங்கி வந்த காய்கறி சில்லரை வியாபாரம் 10 மணிக்கு மேல் ஆகியும் நடைபெற்று வந்ததால், காவல்துறையினர் நேரடியாக வந்து வியாபாரிகளிடம் கடைகளை மூட உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

4
2
1
0
0
0