தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரீப் வரவேற்று பேசினார். இவ்விழாவில் தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு 145 மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் முதலாம் ஆண்டு துறை தலைவர் கோபாலகிருஷ்ணன், கணிணியியல் துறை தலைவர் அன்பழகன், இயந்திரவியல் துறை தலைவர் நீலகண்டன் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் ஸ்ரீபிரியா, அமைப்பியல் துறை தலைவர் அபிராமி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் மும்தாஜ், பொருளாளர் காந்திமதி,ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் கல்லூரி முதல்வர் தமிழரசு நன்றி கூறினார்.