தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள ராஜகிரி தான்  ஶ்ரீ உபைதுல்லா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 30-ம் ஆண்டு விழா தாளாளர் நூர் முகமது தலைமையில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இப்ராஹிம், முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் ஆருண்தாஸ் வரவேற்புரை ஆற்றினர். பள்ளி முதல்வர் விமலா, முதுகலை ஆசிரியர் ஆனந்தி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவில் பாபநாசம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு 10, 11, 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து ஆசிரியர், அலுவலர்களுக்கும்
நினைவு பரிசு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

சிறந்த முதல்வருக்கான விருது பெற்ற பள்ளி முதல்வர் விமலா பாராட்டி கௌரவிக்கப்பட்டார் .விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ராஜகிரி காஷ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் சேக் முகமது அலி, மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட பொருளாளர் முகர்தின், ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், பேராசிரியர்கள் செல்வராஜ், திருநாவுக்கரசு, லயன்ஸ் கிளப் தலைவர் சம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை  சுகன்யா மற்றும் சஃபூரா தகசின்,   ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியாக துணை முதல்வர் பிரேமா நன்றி கூறினார்.

0
0
0
0
0
0