தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஜன்னத்துல் பிர்த்ஹவுஸ் அரபி மதரஸா ஆலிமா வகுப்பு 20 மாணவிகளுக்கு, வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், டேலண்ட் கவுன்சில் இணைந்து நடத்திய புனித குர்ஆன் 24 மணி நேரத்தில் எழுதும் முயற்சியில் வெற்றி பெற்றமைக்காக பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு னைவரையும் ரைஹானா பேகம் வரவேற்றார். ஜியாவுதீன் பாகவி தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக தொண்டி முஸ்தபா ராஹாதி, எஸ்.டி.பி.ஐ, மாநில தலைவர் நெல்லை முபாரக்,
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சலீம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் சிக்கந்தர், முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டேலண்ட் கவுன்சில் அலுவலர் சிவா புனித திருக்குர்ஆனை ஓதக்கேட்டு 24 மணி நேரத்தில் எழுதும் அதிகாரப்பூர்வ உலக
சாதனையில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட அரசு காஜி நீடூர் முகம்மது இஸ்மாயில்,
ஜமாஅத் நிர்வாகி அய்யூப் கான் மற்றும் ஜமாஅத்தார்கள், திரளான பெண்கள், அன்னை கல்வி குழுமத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.