தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை
முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர் மோகன் தலைமையில் அனைவரும்
எடுத்துக் கொண்டனர்.



இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை
எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும்,
நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேன நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என மேலாண் இயக்குனர் மோகன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுமேலாளர் இளங்கோவன், முதன்மை
தணிக்கை அலுவலர் சிவக்குமார், துணை மேலாளர்கள் முரளி, கணேசன், உதவி மேலாளர்கள் வடிவேல், ராஜசேகர், ஆனந்தமுருகன், நாகமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
0
0
0
0
0
0