மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் பரமகுருவான விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ள கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள அவரது மடத்தில் விவசாயத்திற்கு போதிய மழை வேண்டியும், சாகுபடி பணிகள் செழிக்க வேண்டியும் மூல பிருந்தாவன மடத்தில் 15 வேத வித்வான்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து, மடத்தின் புண்ணிய தீர்த்தமான கஷ்யப்ப தீர்த்தகுளத்தில் 11 வேத வித்வான்கள் இறங்கி காலை 6 மணி முதல் இரண்டரை மணி நேரம் வருண ஜபம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இஷ்டாபூர்த்த கைங்கரிய சாரிடபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.