தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆலிமா வகுப்பு மாணவிகள்  24 மணி நேரத்தில் திருக்குர்ஆனை ஓதக்கேட்டு எழுதும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழா அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர் மு.இ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது. அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ.பொ.மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற மாணவிகளை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து கல்லூரியில் பயிலும் ஆலிமா வகுப்பு 20 மாணவிகள் திருக்குர்ஆனை ஓத கேட்டு எழுத தொடங்கினார்கள். இந்நிகழ்வில் அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் எம்.அன்வர் கபீர், தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் ராஜ்குமார், இயக்குனர் கே.ரவி, அரபிக் துறையின் ஒருங்கிணைப்பாளர் மௌலானா ஜியாவுதீன், பாக்கவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

0
0
0
0
0
0