தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள சோழன்மாளிகை ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவரும், கும்பகோணம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துச்செல்வன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி மற்றும் ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி செயலர் சந்திரநாத், பள்ளி தலைமையாசிரியை ரமா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

2
0
0
0
0
1