தஞ்சாவூர் செக்கடி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் சிவகங்கை பூங்கா அருகே ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர் தன் வீட்டில் ஒரு குழந்தையை போல லெட்சுமி என்ற பசுவை வளர்த்து வருகிறார். இந்த பசு மாட்டை காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம். பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில் பசு தொம்பன் குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கே கன்று குட்டியை ஈன்றது. இதனால் பசுவை வெகு நேரம் காணவில்லை என்று மாட்டின் உரிமையாளர் பல பகுதிகளில் தேடி பார்த்த போது கன்றுக்குட்டி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் கன்று குட்டியை மீட்டு ஆட்டோவில் உரிமையாளர் எடுத்துச் சென்றார். இதைக் கண்ட தாய் பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவை மறித்தது. உடனே சபரிநாதன் கன்றுகுட்டியை பசுவிடம் இறக்கிவிட்டார். பின்பு கன்று குட்டியை பசு மாடு அரவனைத்து கொண்டு பாலூட்டிய சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும் வியக்கவும் வைத்தது. பாசப் போராட்டத்தில் மாடு வென்றது எனவும் கூறலாம். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வீடியோ: https://youtu.be/LQtrTwwaaqk?si=ESJOR83z0DmziGbb

0
0
0
0
0
0