தஞ்சையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். தலைமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் நீட்டை ஒழிக்கின்ற விதத்தில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றோம். எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆளுங்கட்சியாக இருந்த போதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இதனை ஒன்றிய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 22க்கும் மேற்பட்ட மாணவர்களை நாம் இழந்துள்ளோம். இதனை பார்த்தும் மனம் இறங்காமல் உள்ள ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளும் விதமாக தமிழகம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றோம்.  

குறைந்தபட்சம் 50 லட்சம் பேரிடம் ஆவது கையெழுத்து  பெறும் விதமாக இந்த இயக்கம் நடைபெறுகிறது. இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் செல்வதோடு நின்று விடாமல் பணி முடிந்து விடாது நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற விதத்தில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது.

நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது குறித்து ஒவ்வொரு முறையும் விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள் இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வோம் சம்பா சாகுபடி தண்ணீர் பிரச்சினை போதிய அளவு மழை இல்லை உள்ளிட்ட நிலையில் இதனை சரி செய்யும் விதமாக மாற்று வழி என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

0
0
0
0
0
0