நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில திரையரங்குகளில் இன்று வெளியானது. இதைப்போல் நாகப்பட்டினத்தில் பாண்டியன் திரையரங்கில் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் காலை முதலே ஏராளமானோர் லியோ படம் பார்க்க குவிந்தனர். 

படம் பாக்க வந்த ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையில் தியேட்டர் வாசலில் வெடி வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் விஜய் படம் திரையில் திரையிடபட்டதை தொடர்ந்து உணர்ச்சி பொங்க மகிழச்சியில் தளபதி என ஆரவாரம் செய்து பொங்க படத்தை கண்டு களித்தனர்.

லியோ திரைப்படம் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி உள்ளதாகவும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை தாண்டி விஜய் நடித்த திரைப்படத்தை வெற்றி படமாக்கி காட்டுவோம் என சூளுரைத்துள்ள அவரது ரசிகர்கள், இன்றைய நாள் தங்களுக்கு தீபாவளி திருநாள் என உணர்ச்சி பொங்க கூறினர்‌.

விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள், இப்படம் அதிக வசூலை அள்ளித் தரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
1
0
0
0
0
0