தஞ்சையில் இரண்டு திரையரங்கில் இன்று லியோ படம் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். லியோ படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் ரசிகர்கள் திரையரங்கின் வெளியில் பட்டாசு வெடி வெடித்து கொண்டாடினர்.
இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் இளைஞர்கள் கூட்டமாக படத்தை பார்க்க உற்சாகமாக திரையரங்கிற்கு வருவதால் திரையரங்கின் உள்ளே தடுப்புகள் அமைத்து அசம்பாவிதம் நடைபெறாதவாறு போலிசார் ரசிகர்களை வரிசையில் உள்ளே அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் திரையரங்கின் வெளியே டிக்கெட்டுகள் கூடுதலாக விற்கப்படுவதாக ரசிகர்கள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் உள்ளே புகுந்ததால் போலீசார் மற்றும் ரசிகர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.