தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் இரண்டாவது முறையாக ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நடைபெற்றது. பழைய நீதிமன்ற சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் கொடிய்சைத்தை தொடங்கி வைத்தார். 

இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் என்பதால் மேடையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டிய இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி வார விடுமுறையை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் மேயரும் நடனமாடி மகிழ்ந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி என எதுவும் இல்லாததால் நிகழ்ச்சிக்கு காலையிலே வந்த இளைஞர்கள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்ட நெரிசலின் காரணமாக இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி காவல்துறையினர் மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகமாக வந்ததாலுக் போதிய இட வசதி இல்லாததாலும், குழந்தைகளும் பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரிய விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு நிகழ்ச்சியை முறையாக நடத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

0
0
0
0
0
0