நாகப்பட்டினம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் அவுரிதிடலில் பேரணி துவங்கி வெளிப்பாளையம், காடம்பாடி, நகராட்சி அலுவலகம் வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தண்ணீரை சேகரிப்போம், வாழ்வாதாரத்தை காப்போம், மழை நீரை சேகரிப்போம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நம் சந்ததியை காப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்