தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசு துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பட்டீஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
 
முகாமிற்கு பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிச்செல்வி ரகு தொடங்கி வைத்து, தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி நவீனா, சுகாதார ஆய்வாளர் ஆமேஸ், கிராம சுகாதார செவிலியர் பூபதி ஆகியோரின் முன்னிலையில் மருத்துவ பணியாளர்கள் சுகன்யா, ரமேஷ், அமுதா, நாகலெட்சுமி ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்க்கொண்டனர். இந்நிகழ்வில் பட்டீஸ்வரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
முகாமில் பட்டீஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சார்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
 
1
0
1
0
0
0